Also Watch
Read this
சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டும் இயக்கம்.. இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது
ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
Updated: Sep 22, 2024 06:20 AM
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று காலை 7 மணி முதல் இரவு 8 வரை சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள், பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் நலன் கருதி, தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், தியாகராயர் நகர், பாரிமுனைக்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved