சென்னை ரேஸ் கிளப்பிற்கு வைத்த சீலை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, கிளப் நுழைவாயில் சீல் அகற்றப்படவில்லை என கிளப் நிர்வாகம் தொடர்ந்த முறையீடு விசாரணைக்கு வந்தது.அப்போது , கிளப்பிற்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அரசு உத்தரவாதத்தை மீறியிருந்தால் அது சம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் என கிளப் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.