சேலம் மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் தண்ணீர் மாசு ஏற்பட்டு நுரை பொங்கி காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேட்டூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக ரசயான கழிவுநீரை வெளியேற்றுவதால் தண்ணீர் செந்நிறத்தில் நுரை பொங்கி காணப்படுவதோடு துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறும் மக்கள் ரசாயனம் கலந்த நீரை பயன்படுத்தும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.