திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், கருப்பு நிறத்தில் இரசாயன கழிவுப்படலம் மிதக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் ரசாயன கழிவுகளை, கழிவுநீர் லாரிகள் சட்டவிரோதமாக தாமரை ஏரியின் நீர்வரத்து கால்வாயில் கொட்டுவதால் ஏரி நீர் மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக லஞ்சம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.