திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்பட்ட ரசாயன அமிலம் சாலையில் கொட்டியதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பாங்கிஷாப் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு வாகனம் மூலம் ரசாயன அமிலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அதில் இருந்து கசிவு ஏற்பட்டு, சாலையில் அமிலம் கொட்டியதாக தெரிகிறது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அமிலத்தின் தன்மையை குறைத்தனர்.இதையும் படியுங்கள் : இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபத்து