தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.மேக்கரை பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர்.அதில் ஆட்டு குட்டியை கட்டி சிறுத்தை பிடிக்க திட்டமிட்ட வனத்துறையினர் இரவு முழுவதும் காத்திருந்தும் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை.ஏமாற்றம் அடந்த வனத்துறையினர் இரண்டாம் நாளாக சிறுத்தை வருகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.