கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில்,தேர் பக்கவாட்டு பகுதியில் சாய்ந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.சோழம்பட்டு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 23ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள திருத்தேர் முக்கிய வீதிகள் ஊர்வலம் வந்தது. தெற்கு தெரு மேட்டுப்பகுதியில் வந்த தேர் திடீரென பக்கவாட்டு பகுதியில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜேசிபி மூலம் தேரை தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது.