கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசத்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் இந்த சபரிமலை சீசன் காலங்களில் லட்சக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதற்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய வழித்தடங்களில் தேனி மாவட்டம் ஒன்றாகும். இந்தத் தேனி மாவட்டத்தில் இருந்து போடி மெட்டு,கம்பம் மெட்டு குமுளி மலைச்சாலை ஆகிய மூன்று வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில் குறிப்பாக குமுளி மலைச்சாலையை அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் காலங்களில் டிசம்பர் மாதம் முதல் மகரஜோதி வரை கம்பத்தில் இருந்து சபரிமலை செல்லும் சாலை ஒரு வழி பாதையாக அமல்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கம்பம் மெட்டு சாலை பழுதடைந்து காணப்பட்டதால் ஒரு வழி பாதை அமல்படுத்தவில்லை. இதற்கிடையே மகரஜோதி நெருங்கும் காரணத்தினால் அன்று ஒரு நாள் மட்டும் ஒரு வழி பாதை அமல்படுத்தப்படும் என காவல்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயில் மகர ஜோதி வரும் ஜனவரி 15 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. மகரஜோதியை காண ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் சபரிமலை செல்லும் பிரதவழித்தடமான தமிழகம் - கேரளாவை இணைக்கும் குமுளி மலைச் சாலையில் வாகன நெரிசலை தவிர்க்க வரும் ஒரு வழிப்பாதை அமல்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ பிரியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஜனவரி 14 ஆம் தேதியன்று மாலை 5 மணி முதல் ஜனவரி 15 ஆம் தேதியன்று காலை 8 மணி வரை தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கம்பம் நகரில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் இருந்து கம்பம் மெட்டு மலைச் சாலை வழியாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி வழியாக கூடலூர், கம்பம் என தேனிக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 5 மணி முதல் ஒரு படி பாதை காவல்துறையினர் சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு பைபாஸ் பிரிவு அருகே காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் குமுளி மலைச்சாலை பயன்படுத்தக்கூடிய கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : விலைமதிப்புள்ள 239 இந்தியப் புறாக்கள் கடத்தல்