புரட்டாசி மாதத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் சேகநாதபுரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவில் பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து சென்று அம்மனை வழிபட்டனர். கரகம் மற்றும் தப்பாட்டம் ஆடி முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வளாகத்தில் வைத்து கும்மியடித்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.