சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டியில் ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 876-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வான வேடிக்கையுடன் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கரிசல்பட்டி மையப் பகுதியில் அமைந்துள்ள மச்சு வீட்டு அம்மா தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டு கொடி ஊர்வலமாக புறப்பட்டது. அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு பள்ளிவாசல் வீதி, புதுப்பட்டி சாலை வழியாக வந்து மேகரையில் அமைந்துள்ள மஹான் ஹஜ்ரத் பீர் சுல்தான் தர்ஹாவை வந்தடைந்தது. அங்கு தர்ஹா உள்ளே கொடி கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து கொடி கொண்டு வரப்படடு கொடி மரத்தை அடைந்தது. அங்கு அனைத்து சமுதாய மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து வானவேடிக்கை நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் நிறைவாக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு வழங்கினர். ஜனவரி மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.இதையும் படியுங்கள் : தேசிய அளவில் நீர் மேலாண்மையில் முதலிடம்