வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, நெல்லை, தென்காசி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்.25 ஆம் தேதி, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.