வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஆண்டிகொட்டாய் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவையொட்டி, காளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில்,காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.