தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில், தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு யாகசாலை பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 29ஆம் தேதி புதன்கிழமை தை அமாவாசை அன்று, பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.