கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளில் திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்கத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜெயந்திநாதரான முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தங்கத்தேரில் கோயிலை சுற்றி வலம் வந்த முருகனை, அங்கு கூடியிருந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர். தங்கத்தேர் கிரிப்பிரகாரம் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. ஏராளமான பெண்கள், குழந்தை வரம், திருமண வரம் வேண்டி மடிப்பிச்சை எடுத்தபடி கண்ணீர் மல்க, முருகனை வேண்டி நின்றனர்.