தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹாவில் இருந்து மாலை 5 மணி அளவில் வெண்கொடி ஊர்வலம் புறப்பட்டது. பட்டாசுகள் வெடித்து, ராஜமேளத்துடன் கிராமம் முழுவதும் சுற்றி வந்த தீன்கொடி நகர்வலம் தர்காவை வந்தடைந்ததும், கொடிமரத்தில் வெண்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதில் மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டனர். வரும் 17ஆம் தேதி சந்தனகூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.