மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டம் தொடர்பான அரசாணைகள் ஹிந்தியில் அச்சடிப்பதால் சாதாரண மக்களுக்கு எப்படி தெரியும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், வரும் காலங்களில் மத்திய அரசு ஆணைகள் தமிழில் அச்சடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.