மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதபோதிலும், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு கொள்கை மாறாமல் நிதி வழங்கி வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் வக்காராமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஒரு காலத்தில் பெண்கள் மேடைக்கு முன்னால் அமரமுடியாத சூழல் இருந்ததாகவும், தற்போது பெண்கள் மேடையின் முன்பு அமர்ந்திருக்க ஆண்கள் ஒருபுறம் நின்று கொண்டிருப்பதாக கூறினார். இதுவே பெரியாரின் புரட்சி தான் என்றார்.