திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நகை மற்றும் வைப்பு தொகை மோசடி புகார் தொடர்பாக இரண்டாவது நாளாக ஏராளமான வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் வைப்பு தொகை தொடர்பாக கணக்கு கேட்ட போது, வங்கி மேலாளர் ரவி என்பவர் சரியாக பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு வேலை பார்த்து வந்த அலுவலக உதவியாளர் ராஜபாண்டி என்பவர் தலை மறைவானதால் சந்தேகம் அடைந்த, வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வங்கியை முற்றுகையிட்டு தங்களது வைப்பு தொகை சரியாக உள்ளதா? என கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்... மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம்