கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் தூய இருதய ஆலயத்தின் நூறாவது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஷப் தாடேனங் அக்விநாஸ் பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புது நன்மை எடுக்கும் நிகழ்வும் அரங்கேறியது.