விடுதியில் செல்போன் திருட்டு : ராமேஸ்வரம் நகர பகுதி சுற்றிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் இரவு நேரத்தில் தங்கும் விடுதிகளுக்குள் சென்று பணம் செல்போன் உள்ளிட்டவற்றை திருடி போவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் தங்கும் விடுதிகளுக்கு சென்று செல்போன் பணம் உள்ளிட்டவற்றை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாய்கி வருகின்றது. இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். Related Link கட்சி நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் பயன்பாடு..?