தஞ்சை கீழவாசல் பகுதியில் தனியாக நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியானது.தஞ்சை கீழவாசல் படிமா சந்து பகுதியில் வசித்து வரும் அன்வர் சேக், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர் அவரை மடக்கி வழிப்பறியில் ஈடுபட்டனர்.பைக்கில் ஒருவன் தயாராக இருக்க, மற்றொருவன் பைக்கிலிருந்து இறங்கி அன்வர் சேக்கை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கினான்.அவனிடமிருந்து அவற்றை பாதுகாக்க அன்வர் சேக், போராடியும் அவரால் முடியவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.