ஓணம் பண்டிகையை, சென்னை அரும்பாக்கத்தில், மலையாள மக்கள் ஆடிப் பாடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு மலையாளிகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமடைந்தனர். இதனை தொடர்ந்து, மகாபலி சக்கரவர்த்தி வேடமிட்டும், மலையாள பாடல்களுக்கு இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.CONFEDERATION OF TAMIL NADU MALAYALEE ASSOCIATION(CTMA) சார்பாக, ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. அனைவருக்கும், ஓணம் சாத்யா பரிமாறப்பட்டது.வாழ்த்து கூறிக் கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் அரவணைத்து, ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு மற்றும் கேரள திரை பிரபலங்கள், சின்னத்திரை, சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இதையும் பாருங்கள்:சென்னையில் களைகட்டிய ஓணம் செலிபிரேஷன் - நடிகர், நடிகைகள் பங்கேற்பு | onamcelebration | Onamகளை கட்டும் ஓணம் பண்டிகை.. மனம் முருகி வேண்டிய கேரள பெண்கள் | onamcelebration | Ayyappanஓணம் பண்டிகை.. பாரம்பரிய உடையணிந்து ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பெண்கள் | Onamcelebration