நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் வலம் வந்த கரடி, அவ்வழியாக வந்த காரை பார்த்து அச்சமடைந்து அங்கிருந்த வீட்டிற்குள் நுழைய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக கெரடா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, பின்னர் லவ்டேல் பகுதியில் வலம் வந்தது. அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை பார்த்து பயந்து வீட்டுக்குள் செல்ல முயன்ற கரடி, கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. கரடி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்தில் தேர் சென்று வர முடியுமா?... சட்டப்பணிகள் ஆணையக் குழுவினர் நேரில் ஆய்வு