சென்னை தாம்பரம் அருகே பைக்கில் அதிவேகமாக என்ற நபர், சாலையில் தடுமாறி விழுந்த நிலையில், அவர் மீது கார் ஒன்று ஏறி இறங்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.எட்டயாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் தாம்பரம்-தர்காஸ் பிரதான சாலையில் தனது பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.