மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேரங்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் கொள்ளை கும்பல் முகத்தில் துணியால் மறைத்தபடி, டவுசர்கள் மட்டும் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.