திருவாரூரில் தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை சுருக்கு மாட்டியும், உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூரில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் கூறப்பட்ட நிலையில், நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.