செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் வீடு கட்டுமானத்திற்காக வைத்திருந்த இரும்புக்கம்பிகளை ஒரு இளைஞனும், சிறுவனும் சேர்ந்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.பழவேலி சாலையோரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாபா நடத்தி வரும் பேரின்ராஜ் என்பவர், தாபாவிற்கு பின்புறம் கட்டிவந்த வீட்டிற்கான கட்டுமான இரும்புக் கம்பிகள் திருடுப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் திருடிய நபர் சென்னை வண்ணாரப்பேட்டை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த தீபக் என்பது தெரியவந்தது.