திருச்செந்தூர் அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை நோட்டமிட்ட இருவர் ஆளில்லாத நேரம் பார்த்து திருடி சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளில் பதிவான இருவரும் பிடிபடாத நிலையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்..