திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோவில் திருவிழாவில் மேள தாளம் அடித்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என கேட்டது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெருமாள்பேட்டை பகுதியில் கடந்த 19, 20 ஆம் தேதிகளில் நடந்த கோயில் திருவிழாவில் மேளம் அடித்தவர்களுக்கு பணம் தரவில்லை என, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விழா நடத்திய கோபி மற்றும் கிருஷ்ணன் என்பவரிடம் கேட்டபோது, அவர்கள் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.