புதுச்சேரியில் திமுக பிரமுகரின் மதுபான கடையின் பூட்டை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்து பணம் கொள்ளையடித்த மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சின்னசுப்ராய பிள்ளை வீதியில் உள்ள மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.