மதுரை சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழவந்தான் சங்கங்கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், தீபாவளி முன் தினம் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பிய நிலையில் நள்ளிரவு மதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முத்தையாவின் மகன் விக்னேஸ்வரன் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.