மதுரை வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக வீட்டின் மீது உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உறவினர்களுக்கும் கார்த்திக்குக்கும் நிலத் தகராறு உள்ளதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.