நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய், கடையில் நின்ற ஒருவரை கடித்து விட்டு ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.