ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கார், சரக்கு வாகனங்களை மதுபோதையில் மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.