திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.வாடகை வீட்டில் குடியிருந்த இவர், கடந்த சில மாதங்கள் முன் அந்த வீட்டை காலி செய்து விட்டு அதே தெருவில் மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்ந்ததாக கூறப்படுகிறது.11 ம் வகுப்பு படிக்கும் இவரது மகள் ரக்க்ஷிதா, விநாயகர் சதுர்த்தியன்று ஏற்கனவே குடியிருந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்க பலகாரங்கள் எடுத்துக் கொண்டு சென்றபோது, தெருவில் படுத்திருந்த வளர்ப்ப நாய் ஒன்று ரக்க்ஷிதா மீது பாய்ந்தது.சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மீட்டனர்.