வேலூரில் மதுபோதையில் தாறுமாறாக ஓட்டப்பட்ட பேருந்து ஆட்டோ பயணிகள் மீது மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காட்பாடியில் இருந்து பாகாயம் வரை சென்ற பேருந்து வடக்கு காவல் நிலையம் அருகே ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய நிலையில், உசூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரவிசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.