திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்என்பவர் இரவு உணவு வாங்கிவிட்டு முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர், மீது மோதி தூக்கி வீசயது. பின்னர் நிலைத்தடுமாறிய கார் அவர் மீது ஏறியது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாலும் அவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.