கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அதிவேகமாக வந்து, முன்னால் சென்ற பைக் மீது மோதி சாலையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீது லாரி ஏறி சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குறிஞ்சிப்பாடியில் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த ரோட்டு மருவாய் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது,அதிவேகமாக வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.