தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முதியவர் மற்றும் சிறுவர் உள்ளிட்டோரை கடித்து குதறிய வெறிநாயை அப்பகுதி மக்கள் கம்பால் அடித்து கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகியது. சங்கரநாராயணர் கோயிலுக்கு செல்லும் வழியில் நின்றிருந்த முதியவர் மற்றும் சிறுவர்களை வெறி நாய் ஒன்று விரட்டி, விரட்டி கடித்து குதறியது. இதனை அறிந்த அங்குள்ள மக்கள் வெறிநாயை கம்பால் அடித்து கொன்றனர். வெறிநாய் கடித்ததில் காயம்அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட வெறி நாயை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.