கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மளிகை கடையில் சில்லறை கேட்பது போல் நடித்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியது. நயினார் பாளையம் பேருந்து நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த மோதிலால் என்பவருக்குச் சொந்தமான மளிகை கடைக்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பத்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். இந்நிலையில், சில்லறை எடுத்து வருவதாக மோதிலால் உள்ளே சென்ற போது, அந்நபர் கல்லாவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.