திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுபோதையில் இளைஞர்கள் வந்த நிலையில், அதில் ஒருவர் பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கன்னத்திலேயே அறைந்து தாக்கினார். இதனை தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய சேவூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் மற்றும் ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.