திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ராதா என்ற பெண் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 17 வயது சிறுவனுக்கு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.