திருப்பத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பால் வியாபாரம் செய்து வரும் இம்ரான், மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்ற போது, வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வெளியே வந்த போது, வாகனம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.