சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, மொத்தமுள்ள 417 பள்ளிகளில், 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்கனவே 6 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.