கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மூன்றாவது நாளாக நடைபெற்ற விசாரணைக்கு வேலுச்சாமிபுரம் பகுதியில் நகை அடகு கடை, எலக்ட்ரிகல், பேக்கரி உள்பட 8 கடைகளின் உரிமையாளர்கள் ஆஜரானார்கள். சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் முன், சம்மன் பெற்றவர்களில் 15 பேர் ஏற்கனவே ஆஜராகினர். இன்று ஆஜரான 8 பேர் மட்டுமல்லாமல், மேலும் சிலரும் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.