கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி தவெக சார்பில் வீடியோ ஆதாரங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜரானார்கள்.