கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரத்தில் கடை வைத்திக்கும் வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி, இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று ஆஜரான காவலர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள், பல்வேறு கட்டங்களாக, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - Karur Stampede | கரூர் விவகாரம் போலீசாரிடம் சிபிஐ அதிரடி விசாரணை | CBI Enquiry