தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதற்கு உரிமை கோரிய முஸ்தபா என்பவருக்கு அந்த பணம் சொந்தமானது அல்ல என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலின் போது போலீசார் பறிமுதல் செய்த நான்கு கோடி ரூபாய்க்கு உரிமை கோரியது தொடர்பாக ரயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தும் முஸ்தபா என்பவரிடம் கடந்த ஜூலை 30ம் தேதி சிபிசிஐடி விசாரணை நடத்தியது. இதில் அவரது வங்கி பரிமாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் நான்கு கோடி பணம் அவருக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்திற்கு உரிமை கோரச் சொன்னது யார்? என்பது குறித்து முஸ்தபாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.