சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளியில் காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய சோறவை பஞ்சாயத்தில் உள்ள வைரவன் ஏரியில் உபரி நீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பாஜக, பாமக நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திப்பம்பட்டி நீர் ஏற்று நிலையத்தில் இருந்து உபரி நீர் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளை இணைக்கும் பணிகளை 40 ஏரிகளில் இன்னும் தொடங்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . இதையும் படியுங்கள் : ஒப்பந்ததாரர்களை கடிந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் கட்டுமானப் பணி தாமதமாவதால் ஆட்சியர் சரமாரி கேள்வி...!