தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசிய அவர், மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரம் இல்லை என சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.